விஷம் கொடுத்து கொல்ல முயற்சி;என் மனைவிக்கு ஏதும் நேர்ந்தால்..இம்ரான்கான் குற்றசாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மனைவிக்கு விஷம் கொடுத்து கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்ல முயற்சி
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், முன்னாள் பிரதமருமானவர் இம்ரான் கான் (71). ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் இம்ரான்கானின் 3-வது மனைவியான புஷ்ரா பீபி தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய 2 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, இம்ரான்கானின் இஸ்லாமாபாத் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் குற்றசாட்டு
இந்நிலையில், தோஷகானா ஊழல் வழக்கின் விசாரணையின் போது சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு மெல்ல கொள்ளும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றம்ச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேலும், தனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பேற்க வேண்டும் என்று இம்ரான்கான் தெரிவித்துளார்.
அதுபோல், கழிவறையை சுத்தம் செய்ய உபயோகிக்கப்படும் திரவத்தை தனக்கு உணவில் கலந்து கொடுத்ததாகவும், இதனால் தனக்கு கண் வீக்கம், மார்பு மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமப்படுவதாக புஷ்ரா பீபி குறிப்பிட்டுள்ளார்.