இம்ரான்கானின் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு - அரசியலில் திருப்பம்!
இம்ரான் கானின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கான்
2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். அப்போது, பலர் பிரதமருக்கு அளித்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று ஊழல் செய்ததாக
இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கிலும் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை நிறுத்தி வைப்பு
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் முதல் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, இம்ரான்கான் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ரம்ஜான் விடுமுறைக்கு பின் வழக்கில் விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் வேட்பாளர்கள் எதிர்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.