எனது ஆட்சி கவிழ காரணமே இவர்தான் : பரபரப்பை கிளப்பிய இம்ரான்கான்
பாகிஸ்தானில் தனது ஆட்சி கவிழ காரணம் ராணுவ தளபதிதான் என்று இம்ரான்கான் மறைமுகமாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து இல்லை , .
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டும் நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் ஆட்சி மொத்தமாக கவிழ்ந்தது, இந்த நிலையில் தனது ஆட்சி கலைந்தமைக்கு ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை பெயர் குறிப்பிடாமல் காரணம் காட்டி சாடி இருப்பது புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் நியமனத்துக்கு இம்ரான்கான் முதலில் ஒப்புதல் அளிக்க மறுத்து நிலையில் இறிதியில்தான் ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் இம்ரான்கான் தனது கட்சியினருடன் நேற்று முன்தினம் இரவு டுவிட்டர் வாயிலாக பேசினார். அப்போது அவர் விடுத்த பதிவில்தான் ஆட்சி கவிழ ராணுவ தளபதிதான் காரணம் என்று மறைமுகமாக சாடி உள்ளார்.