விஷம் வைத்து கொல்லப் பாக்குறாங்க.. சிறையில் மரண பயத்தில் பதறும் இம்ரான் கான்!
தன்னை விஷம் வைத்துக் கொல்லும் ஆபத்து இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான்
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கானின் அறிக்கையை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
அதில், "அரசு நிறுவனங்களை அழிப்பதன் மூலம் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை மீண்டும் அரசியலுக்குத் திரும்ப அனுமதிக்கிறார்கள். இது பாகிஸ்தான் நீதித்துறையின் முழுமையான சரிவு.
பகீர் அறிக்கை
தன் மீதான அனைத்து வழக்குகளும் முற்றிலும் போலியானவை. அரசியல் உள்நோக்கம் கொண்டவை. தேர்தல் முடியும் வரை அல்லது நீண்ட காலத்துக்குத் தன்னைச் சிறையில் அடைப்பதற்காகவே தன் மீதான குற்றச்சாடுகள் இட்டுக்கட்டப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் வளர்ந்துவரும் அரசியல் விழிப்புணர்வு மற்றும் சதித் திட்டங்களுக்கு எதிரான போக்கு பாகிஸ்தான் அரசை பயமுறுத்துகிறது. தனது உயிரைப் பறிக்க ஏற்கனவே இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டை விட்டு வெளியேற மறுத்ததால்,
ஸ்லோ பாய்சன் மூலம் தன்னைக் கொல்ல மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படலாம். நான் எனது நாட்டை விட்டு வெளியேற ஒப்புக் கொள்ளாததால் நிச்சயமாக என் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தோஷ்கானா வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.