பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளர்; இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு - பரபரப்பு!
இம்ரான் கான் பிரதமர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கான்
கடந்த வாரம் பாகிஸ்தானில் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்ற முடிவுகளில், பெரும்பான்மையில் எந்த கட்சியும் இல்லாததால் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே வாய்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 75 தொகுதிகள், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகின்றன.
பிரதமர் வேட்பாளர்
தொடர்ந்து, பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையிலும், ஆட்சியமைக்க முடியாத சூழலே நிலவுகிறது.
இந்நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிடிஐ கட்சி பொதுச்செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியால் மட்டுமே அரசாங்கத்தை அமைக்க முடியும். இல்லையெனில், சுயேச்சை வேட்பளர்கள் மற்றொரு கூட்டணியில் இணைய வேண்டும். இதில் தற்போது இம்ரான் கான் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.