மார்பக புற்றுநோய் - மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் .. பெண்களே எச்சரிக்கை!

Breast Cancer Tamil nadu Medicines Women
By Vidhya Senthil Oct 22, 2024 10:08 AM GMT
Report

  பெண்கள் அனைவரும் மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய்

உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

breast cancer

குறிப்பாக இந்தியாவில், கேரளாவிற்கு அடுத்த படியாகத் தமிழகத்தில் தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து ஆண்டுதோறும் ஒவ்வொரு அக்டோபர் மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

திடீரென தாக்கும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்? அறிகுறிகள் என்னென்ன தெரியுமா!

திடீரென தாக்கும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்? அறிகுறிகள் என்னென்ன தெரியுமா!

அந்த வகையில் தமிழகத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கிச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை

இதுகுறித்து தமிழக பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் புற்றுநோயால் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் 70 சதவீதம், மார்பக புற்றுநோய் பாதிப்பால் ஏற்படுகிறது. பெரும் பாலானோர் புற்றுநோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.

breast cancer

வாழ்க்கை முறை மாற்றத்தால் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக 4 மாவட்டங்களில் இதுவரை 5.24 லட்சம் பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை நடத்தப்பட்டதில் 2,555 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.