சாத்தான்குளம் வழக்கு - எஸ்.ஐ அறையில் உள்ள முக்கிய ஆவணங்களை தூக்கிய சிபிஐ!

Tamil nadu Attempted Murder Central Bureau of Investigation
By Sumathi Aug 13, 2022 06:24 AM GMT
Report

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சீல் வைக்கப்பட்ட, எஸ்ஐ அறையிலிருந்து முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு நிலவியது.

சாத்தான்குளம் வழக்கு

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கப்பட்டு முதல் நாள் இரவு பென்னிக்ஸூம்

சாத்தான்குளம் வழக்கு - எஸ்.ஐ அறையில் உள்ள முக்கிய ஆவணங்களை தூக்கிய சிபிஐ! | Important Documents Of Sathankulam Murder Case

இரண்டாம் நாள் காலை தந்தை ஜெயராஜ்-ம் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்து,

 முக்கிய ஆவணங்கள்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் 10 போலீசாரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு 3 சொகுசு வாகனங்கள் மற்றும் ஒரு வஜ்ரா வாகனத்தில் வந்த சிபிஐ அதிகாரிகள்,

சாத்தான்குளம் வழக்கு - எஸ்.ஐ அறையில் உள்ள முக்கிய ஆவணங்களை தூக்கிய சிபிஐ! | Important Documents Of Sathankulam Murder Case

காவல் நிலையத்திற்குள் சென்று சீல் வைக்கப்பட்ட எஸ்.ஐ.ரகு கணேஷின் அறையின் சீலை அகற்றி அதில் இருந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

 சிபிஐ

மேலும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர டேபிளையும் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள் அதையும் கொண்டு சென்றனர்.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, பெரிய வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.