ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது - நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
2025 பட்ஜெட்
2025-26 நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட் வாசிக்க தொடங்கியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்து, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்து விட்டார்கள்.
அறிவிப்புகள்
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும்.
ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும். டெலிவரி ஊழியர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம் உருவாக்கப்படும்.
100% அந்நிய முதலீடு
அடுத்த நிதியாண்டில், நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்.
பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட் பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்.
Swiggy, Zomato, Zepto உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
விண்வெளி துறை வளர்ச்சிக்கு தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடுக்கு அனுமதி.
பேட்டரிகளுக்கு சுங்கவரி விலக்கு
புற்றுநோய் உள்ளிட்ட 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்.
லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு.
குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்களை உயர்த்தும் தன் தன்யா கிருஷி யோஜனா என்ற புதிய திட்டம்.
எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு.
முதியோருக்கான வட்டி வருவாயில் ₹1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரியில் சலுகை.
வருமான வரி விலக்கு
தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 4 ஆண்டுகளுக்கு கால அவகாசம்.
2 சொந்த வீடுகளுக்கு வரி சலுகை பெறலாம்.
வீடு வாடகைக்கான TDS வரம்பு ரூ. 6 லட்சமாக உயர்வு
ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.