தமிழகத்தில் இந்த பனி எப்போது குறையும் - வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்
தமிழகத்தில் நிலவும் பனி குறித்து பாலச்சந்திரன் விளக்கியுள்ளார்.
பனி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மூடு பனி நிலவுவது குறித்து வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன், “ஜனவரி பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மாதங்கள் என்று சொல்வோம். பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி உள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி உள்ளது. ஒரே நாளில் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் வித்தியாசம் 10 டிகிரி உள்ளது. பகல் நேரங்களில் நீர் நிலைகளில் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாக கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம்.
வெப்பநிலை
இரவு நேரங்களில் மேகங்கள் அற்ற சூழ்நிலை இருக்கும் பொழுது வெப்பநிலை 21 டிகிரியாக மாறும்பொழுது நீர் துளிகள் காற்றில் உள்ள தூசிகளில் படிந்து காற்றின் வேகமும் இல்லாததால் இதுபோன்று மூடு பனி உருவாகிறது.
அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் இன்னும் ஐந்து நாட்களுக்குள் தமிழகத்தில் மூடு பனி குறையும்.