இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் மணிமண்டபம் - முதலமைச்சர் அறிவிப்பு!

M K Stalin Tamil nadu
By Sumathi Sep 11, 2023 06:25 AM GMT
Report

இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மானுவேல் சேகரனார்

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக போராடியவர் தியாகி இம்மானுவேல் சேகரனார். 1942 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார்.

இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் மணிமண்டபம் - முதலமைச்சர் அறிவிப்பு! | Immanuel Sekaranar Mani Mandapam Cm Stalin

முதுகுளத்தூர், செல்லூர் கிராமத்தில் பிறந்தார். எனவே அவருக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழக அரசு

தொடர்ந்து, இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அவரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தினர்.

இந்நிலையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அவர் அடக்கம் செய்யப்பட்ட

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.