நவம்பரில் 123% அதிக மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நவம்பர் மாதத்திற்கான மழை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது.
இதில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. டானா எனப் பெயரிடப்பட்ட இந்த புயலானது, ஒடிசா மேற்குவங்கம் அருகே கரையை கடந்தது.
123% அதிக மழை
இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான மழை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் முதல் வார இறுதியில் வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால் நவம்பர் 7ஆம் தேதி முதல் 11 தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தது.
நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு, காரைக்கால், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தென் மாநிலங்களில் இயல்பை விட 123% அதிக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.