மீண்டும் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Tamil nadu Chennai TN Weather Cyclone
By Vidhya Senthil Dec 09, 2024 01:28 PM GMT
Report

தமிழகத்தில் டிச.10முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கனமழை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

தமிழகத்தில் டிச.10முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

இது மேலும் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்திற்கு புதிய எச்சரிக்கை விடுத்த IMD!

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்திற்கு புதிய எச்சரிக்கை விடுத்த IMD!

இதன் காரணமாக, தமிழகத்திற்கு டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 11ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆரஞ்சு அலெர்ட் 

டிசம்பர் 12ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் டிச.10முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 13ம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.