அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி - காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்!
ரயிலின் செயினை பிடித்து நிறுத்திய பயணி கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவசர தேவை
நாள்தோறும் சுமார் 4 கோடிக்கு அதிகமான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பயணிகளின் அவசர தேவைக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும் உள்ளது.
அதன்படி, பயணி ஒருவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டாலோ அல்லது ரயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட நேர்ந்தாலோ பெட்டியில் உள்ள செயினை பிடித்து பயணிகள் இழுக்கலாம். உடனடியாக ரயில் நிறுத்தப்படும்.
ஆனால், சமீப காலமாக தேவையற்ற காரணங்களுக்காக இந்த செயினை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் உடனடியாக சோதனை நடத்தியதில் கடந்த மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து அபராதம் விதித்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அதிர்ச்சி காரணம்
இதுகுறித்த காரணத்தை பயணி ஒருவர் கூறுகையில், ‘நான் நிறைய லக்கேஜ் கொண்டு வந்துள்ளேன். குடும்பத்தினர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் கூட்டத்திற்கு மத்தியில் என்னுடைய லக்கேஜ்களை ரயில் நிலையத்தில் இறக்க முடியாது.
எனவேதான் செயினை பிடித்து ரயிலை நிறுத்தினேன். அபராதமாக நான் செலுத்தும் தொகை ரயில் நிலையத்தில் இறங்கினால் ஆகும் செலவைவிட குறைவானது. எனவே தான் நான் செயினை பிடித்து இழுத்தேன்’ எனத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்படி, காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்தால், 6 மாதம் முதல் 1 வருடம் வரை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.