10 கி.மீ உடைந்த சக்கரத்துடன் ஓடிய ரயில்; அலறிய பயணிகள் - பெரும் அதிர்ச்சி சம்பவம்!
ரயில் 10 கிமீ தூரம் உடைந்த சக்கரத்துடன் ஓடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உடைந்த சக்கரம்
ஒடிசா மாநிலம் பலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ஆம் தேதி பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று பீகாரில் இருந்து மும்பை நோக்கி பவன் எக்ஸ்பிரெஸ் ரயில் சென்றுள்ளது. பீகாரின் முசார்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது S-11 கோச் பகுதியில் பெரும் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து பயந்த பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
விபத்து தவிர்ப்பு
மேலும், அதிர்ச்சியில் கவான்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பயணிகள் அச்சத்தில் செயின் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெட்டி பகுதியில் பரிசோதித்த போது அங்கிருந்த சக்கரம் உடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
பின் உடனே சக்கரம் சரிசெய்யப்பட்டது. சுமார் 10 கிமீ தூரம் உடைந்த நிலையில், பயணிகள் எச்சரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.