போதை பொருள் எதிரொலி; மதுபான கூடங்கள் இடித்து தரைமட்டம் - அதிரடி நடவடிக்கை!
போதை பொருள் வீரப்பனை செய்த மதுபான கூடங்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுபான கூடங்கள்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஹோட்டலில் இளைஞர்கள் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் வைரல் வீடியோக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு மத்தியில் தானே முனிசிபல் கார்ப்பரேஷன் அந்த நகரத்தில் உள்ள பல சட்டவிரோத பார்கள் மற்றும் பப்கள் மீது புல்டோசர் நடவடிக்கையை எடுத்துள்ளது.
தானே மற்றும் மீரா-பயந்தர் பகுதிகளை போதையில்லா இடமாக மாற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார். இதையடுத்து, கமிஷனர் சவுரப் ராவ் உத்தரவின் பேரில் நகரின் பல்வேறு இடங்களில் இந்த நடவடிக்கைகள் பாய்ந்தது. இது தொடர்பாக தானே முனிசிபல் கார்ப்பரேஷன் கூறியதாவது,
முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் மொத்தம் 31 பான் ஸ்டால்கள் பறிமுதல் நடவடிக்கைகளுக்கு ஆளாயின. அதே வேளையில், ஓட்டல்கள், மதுக்கடைகள், பார்கள் உட்பட 8 சட்டவிரோத நிறுவனங்கள் இடிக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.
இடித்து தரைமட்டம்
வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள பார்கள், அங்கீகரிக்கப்படாத பான் ஸ்டால்கள் மற்றும் குட்கா விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வர்தக் நகர் வார்டு கமிட்டி பகுதியில் உள்ள சீக்ரெட் பார்,ஹூக்கா பார்லர்,கோத்தாரி காம்பவுண்டில் உள்ள பப்கள் மற்றும் பார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோட்பந்தர் சாலையில் உள்ள குஷி லேடீஸ் பார் மற்றும் ஓவாலாவில் உள்ள மயூரி லேடீஸ் பார் ஆகியவை தரைமட்டமாக்கப்பட்டன. நகராட்சி அதிகார வரம்பில் உள்ள அங்கீகரிக்கப்படாத ஹோட்டல்கள், பப்கள் மற்றும் பார்கள் முற்றிலுமாக அகற்றப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தானே முனிசிபல் கார்ப்பரேஷன் துணை ஆணையர் ஜி.ஜி.கோடோபுரே தெரிவித்தார்.