கள்ளத்தொடர்பில் இருந்த பெரியம்மா.. மகனுடன் சேர்ந்து காதலனை அடித்தே கொன்ற கொடூரம்!

Tamil nadu Attempted Murder Death Krishnagiri
By Vinothini Aug 17, 2023 05:12 AM GMT
Report

மகனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.n

கள்ளக்காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான ஜோதி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடியில் ஆசிரியராக உள்ளார். இவரது கணவர் 10 வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார்.

illegal-affair-women-and-son-killed-a-man

பேரிகை அருகே மகாதேவபுரத்தை சேர்ந்த 40 வயதாகு வெங்கடேஷ், இவர் லாரி டிரைவராக வெளியே பார்த்து வருகிறார், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றார்.

இவருக்கும் ஜோதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர் கண்டுபிடித்தார்.

கொடூர கொலை

இந்நிலையில், இவர்களது கள்ளகாதல் குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு கோபமடைந்த ஹரீஷ், தனது பெரியம்மாவிடம் நீங்களே இப்படி செய்யலாமா என்று கேட்டு கண்டித்துள்ளார். பின்னர் ஜோதி கள்ளக்காதலனை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று கூறிவிட்டார்.

illegal-affair-women-and-son-killed-a-man

அதனை மீறி கடந்த திங்கள்கிழமை இரவு வெங்கடேஷ் அங்கு சென்றுள்ளார், அப்பொழுது அங்கிருந்த ஹரீஷ் இங்கு எதற்காக வந்தீங்க என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்துள்ளனர்.

இந்த சதாமின் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இது குறித்து பேரிகை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, வெங்கடேசின் கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவருடைய தங்கை மகன் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.