கள்ளக்காதலக்கு தடையாக இருந்த மகனை அடித்தே கொன்ற தாய்..!
தன் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மகனை தன் கள்ளக்காதலன் உதவியுடன் தாய் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் திதர்கஞ்ச், தர்ம்ஷாலாகாலியை சேர்ந்தவர் ஜூலி தேவி, இவர் சூரஜ் என்ற 19 வயது மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர்களது வீட்டில் தர்மேந்திர குமார் என்ற இளைஞர் வாடகைக்கு குடியேறினார். கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் ஜூலி தேவியின் மீது தர்மேந்திர குமாருக்கு ஈர்ப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். அவர்களின் பழக்கம் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மகன் சூரஜ் வீட்டில் இல்லாத போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். தனது தாயின் நடத்தையில் மாற்றம் தெரியவே மகன் சூரஜ் தாயை கண்காணிக்க தொடங்கியுள்ளார்.
அப்போது தர்மேந்திர குமாருக்கும் தனது தாய்க்கும் தகாத உறவு இருப்பது தெரியவந்துள்ளது. இதை பல முறை எச்சரித்தும் தாய் ஜுலி கேட்கவில்லை.இதனால் சூரஜ் மற்றும் தர்மேந்திர குமாருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சூரஜ் தனது பாட்டி வீட்டுக் சென்றுள்ளார். சுராஜ், பின்னர் மே 22 ஆம் தேதி இரவு அவர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், தர்மேந்திர குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சூரஜ் அடித்துக் கொலை செய்தனர்.
சூரஜின் உடலை தண்டவாளத்திலும்,தலையை குழி தோண்டி புதைத்துள்ளனர். மே 23 ஆம் தேதி சடலத்தை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜுலியை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தனது கள்ளக்காதலன் தனது மகனை அடித்துக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஜூலி தேவியின் கள்ளக்காதலன் தர்மேந்திர குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.