நடிகை இலியானாவை கர்ப்பமாக்கிய காதலன் இவர்தானா? - வைரலாகும் புகைப்படம்!

Pregnancy Ileana D'Cruz
By Vinothini Jun 04, 2023 07:54 AM GMT
Report

பிரபல நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார், தற்பொழுது இவரது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலியானா

பிரபல நடிகை இலியானா, தெலுங்கு திரை உலகின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து தமிழில், 'கேடி' என்கிற படத்தில் அறிமுகமானார்.

ileana-shares-picture-with-her-boyfriend

ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெற்றுத் தரவில்லை.

இதனால் இலியானா தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

பிறகு தமிழில் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து கம்பாக் கொடுத்தார், அது ஹிட் ஆனது.

கர்பம்

இதனை தொடர்ந்து, இவர் பிரபல நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

ileana-shares-picture-with-her-boyfriend

மேலும், இவர் திருமணம் செய்தி வரும் முன்பே கர்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

ஆனால் இதுவரை அவரது காதலன் யார் என்பதையும், திருமணம் நிகழ்ந்ததை என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை ரகசியமாகவே வைத்து வந்தார். தற்பொழுது இவர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் இருவரும் மோதிரம் அணிந்திருந்தனர் இதனால் இவருக்கு திருமணம் நிகழ்ந்ததா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.