திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகை - வைரலாகும் புகைப்படம்!
நடிகை இலியானா திருமணம் நடக்காமலே கர்பமான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா நடிகர் விஜய்யுடன் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்தார்.
அதன் பிறகு பெரிதாக தமிழில் நடிக்கவில்லை, ஆனாலும் இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
மேலும், இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்துஅவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த காதல் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.
பின்னர், நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக கூறப்பட்டது.
புகைப்படம்
இந்நிலையில், கடந்த மாதம் இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு குழந்தையின் ஆடையுடன், மம்மா என்கிற டாலர் அணிந்து, கர்ப்பமாக இருக்கும் தகவலை வித்தியாசமாக தெரிவித்திருந்தார்.
இதனால் பலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா என்பது போல் இலியானா விடம் கேள்வி எழுப்பி வந்தனர்.
தற்போது இவர், முதல்முறையாக பெரிதாக இருக்கும் வயிறுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அது வைரலாகி வருகிறது, மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.