வெர்ஜினிட்டியை எப்போது இழந்தீர்கள்? கேள்வியால் கடுப்பான இலியானா!

Pregnancy Indian Actress Ileana D'Cruz
By Sumathi Apr 22, 2023 05:30 PM GMT
Report

அத்துமீறிய ரசிகரின் கேள்விக்கு இலியானா காட்டமான பதிலை அளித்துள்ளார்.

 இலியானா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

வெர்ஜினிட்டியை எப்போது இழந்தீர்கள்? கேள்வியால் கடுப்பான இலியானா! | Ileana Announced That She Is Pregnant

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.

கர்ப்பம்?

தொடர்ந்து, நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை காதலிக்க வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர் எங்கும் இதுகுறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகை இலியானா இன்ஸ்டாகிராமில் குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு வெளியிட்ட புகைப்படம்

வெர்ஜினிட்டியை எப்போது இழந்தீர்கள்? கேள்வியால் கடுப்பான இலியானா! | Ileana Announced That She Is Pregnant

அவர் கர்ப்பமாக இருப்பதாக புயலை கிளப்பியுள்ளது. தொடர்ந்து, முன்னதாக ஸ்டோரியில் எப்போது உங்கள் கன்னித்தன்மையை இழந்தீர்கள்? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, "வாவ், அடுத்தவர்கள் உறவில் அவ்வளவு ஆர்வம்? உங்கள் அம்மாவிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்?" என்று திருப்பி காட்டமாக கேட்டார்.