திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்; காதலர் இவர்தான் - ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!
இலியானா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை இலியானா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, 'நண்பன்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
வைரல் புகைப்படம்
தொடர்ந்து, ட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டார். திருமணத்திற்கு முன்பே என்று குழம்பிய ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், "Date Night" என்று பதிவிட்டு காதலருடன் இருக்கும் படத்தை ஸ்டோரியாக பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் இவர் என கேள்வி எழுப்பியும் குழப்பத்திலும் உள்ளனர்.