முதன்முறையாக கணவரை பற்றி பகிர்ந்த இலியானா - இணையத்தில் வைரல்!

Tamil Cinema Ileana D'Cruz Tamil Actress
By Vinothini Nov 25, 2023 04:30 PM GMT
Report

இலியானா தனது கணவரை பற்றி பேசியுள்ளார்.

நடிகை இலியானா

பிரபல நடிகை இலியானா, தெலுங்கு திரை உலகின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து தமிழில், 'கேடி' என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெற்றுத் தரவில்லை.

ileana

இதனால் இலியானா தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பிறகு தமிழில் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து கம்பாக் கொடுத்தார், அது ஹிட் ஆனது.

தேடி போனால் அட்ஜஸ்ட்மென்ட் வரும்.. PRO-வுடன் அதை பண்ணனும் - பிரபல நடிகை பேட்டி!

தேடி போனால் அட்ஜஸ்ட்மென்ட் வரும்.. PRO-வுடன் அதை பண்ணனும் - பிரபல நடிகை பேட்டி!

கணவரை பற்றி

இந்நிலையில், இவர் பிரபல நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் வெளியானது. இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனார். பிறகு இதுவரை அவரது காதலன் யார் என்பதையும், திருமணம் நிகழ்ந்தது என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை ரகசியமாகவே வைத்து வந்தார்.

ileana

சமீபத்தில் தான் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்பொழுது Ask Anything என பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய இலியானாவிடம், உங்கள் குழந்தையை சிங்கிள் மதராக எப்படி கவனிக்கிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இலியானா பார்ட்னருடன் சிரித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "நான் சிங்கள் மதர் இல்லை" என்று கூறியுள்ளார். எனவே, இதன்மூலம் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் குழந்தையை வளர்ப்பதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் ஏன் இவரது கணவரை பெரிதளவு வெளியே காட்டவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.