கவனமா இருக்கனும்; ஏமாத்த பார்த்தாங்க - இளையராஜாவின் மருமகள் சொன்ன சீக்ரெட்!
இளையராஜாவின் மருமகள் சீரியல் நடிகை விலாசினி குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
நடிகை விலாசினி
ரேடியோவில் ஆர்ஜேவாக வலம் வந்தவர் விலாசினி. இவர் இளையராஜாவின் மனைவியின் அண்ணன் மகள். அதன்பின் சின்னத்திரையில் தடம் பதித்தார். நாம் போன் செய்யும் போது சில நேரங்களில் நீங்கள் டயல் செய்த நபர் வேறொருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும் வாய்ஸ் இவருடையது தானாம்.

மேலும், 250 படங்களுக்கு மேலாக டப்பிங் செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன், தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் தவமாய் தவமிருந்து போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனுபவம்
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பொதுவா சினிமாவில் நடிகர் நடிகைகளை நேரடியாக நிறுவனங்கள் செலக்ட் செய்வதில்லை. அதற்கு நிறைய ஏஜென்சி இருக்கிறது. அவற்றில் பெரும்பான் ஏஜென்சிகள் பொய்யாகவும் இருக்கிறது.

இப்படித்தான் ஒரு நபர் என்னிடம் போன் செய்து விக்ரம் பிரபுவிற்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கூறினார். உடனே நான் யார்டா நீ என கேட்டேன். எதுக்காக அப்படி கேட்டேனா, எனக்கே தெரியும். நடித்தால் நான் கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில் தான் நடிக்க முடியும்.
ஆனால் அவர்கள் போன் செய்து என்னை ஏமாற்ற பார்த்தார்கள். இந்த மாதிரி ஆட்களிடம் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil