ஏன் திமிராக இருக்கிறார்? பலருக்கு பிடிக்காது - இளையராஜா குறித்து சீக்ரெட் சொன்ன சினேகன்!
இளையராஜா குறித்து கவிஞர் சினேகன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இளையராஜா
இளையராஜா குறித்து அறியாதவர் யாரும் இருக்கமுடியாது. அந்த அளவிற்கு தனது இசையால் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவர். அன்பு, சோகம், கண்ணீர், அரவணைப்பு என அனைத்திற்கும் அவரிடம் மருந்து உண்டு. இந்நிலையில் அவரை குறித்து கவிஞர் சினேகன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், இளையராஜா கோவக்காரர், திமிர் பிடித்தவர் என்று எல்லாம் சொல்லப்படுகிறது. அவருடன் இணைந்து நான் பல பாடல் எழுதி இருக்கிறேன் உண்மையில் அவர் குழந்தை மனம் கொண்டவர். அனைவர் இடத்திலும் அழகாக பேசுவார்.
சினேகன் புகழாரம்
மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறுவிதமாக பேசும் குணம் இல்லாதவர். அவருக்கு தவறு என்று மனதில் பட்டுவிட்டால், முகத்திற்கு நேராக குறையை சொல்லிவிடுவார். இதனால் எதிரில் இருப்பவரின் மனம் பாதிக்கும். ஆனால், அதைப்பற்றி யோசிக்காமல் மனதில் பட்டத்தை பேசுவததால், இவரை பலருக்கும் பிடிக்காது.
அனைவருக்கும் பிடித்தவர்கள் போல கடவுளால் கூட இருக்க முடியாது. ஏன் என்றால் கடவுளை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவருடன் நெருங்கி பழகிய பிறகுதான் கோபுரமாக தெரிந்தவர், எனக்கு குழந்தையாக தெரிந்தார். அதையும் மீறி இவர் கோவப்படுகிறார் என்றால், எங்கோ ஓர் இடத்தில் அவமானத்தாலும், கோவத்தாலும், ரணத்தாலும் பாதிக்கப்பட்டதன் வெளிப்பாடு, ஏதாவது ஒரு இடத்தில் வெளிப்படத்தான் செய்யும்.
மனதில் எழும் கோவங்களையோ, அவமானத்தையோ நாம் மண்ணில் புதைக்கவில்லை மனதில் புதைத்து இருப்பதால் அது அவ்வப்போது வெளிவரத்தான் செய்யும். இது அவரிடம் வெளிப்படுவதில் தவறு இல்லை என்று தான் சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.