ரஜினியின் 'கூலி' திரைப்பட குழுவிற்கு இளையராஜாவால் புது சிக்கல் - என்ன காரணம்?

Ilayaraaja Lokesh Kanagaraj Sun Pictures Coolie
By Swetha May 01, 2024 07:10 AM GMT
Report

கூலி படக்குழுவிற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

'கூலி' திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. அண்மையில் இப்படத்தின் தலைப்பை டீசர் வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

ரஜினியின்

ஒவ்வொரு லோகேஷ் கனகராஜ் படத்திலும் ஒரு பழைய பாடல் இருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்தது தான். அந்த வகையில், டீசரில் தங்கமகன் படத்தில் உள்ள இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் இடம்பெற்றிருந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், கூலி படத்தில் அனுமதியின்றி, தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அதில், கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மரியாதையா சொல்றேன் - இனி வாயை பொத்திட்டு இருக்கனும்!! வைரமுத்துவை சாடிய கங்கை அமரன்

மரியாதையா சொல்றேன் - இனி வாயை பொத்திட்டு இருக்கனும்!! வைரமுத்துவை சாடிய கங்கை அமரன்

புது சிக்கல்

ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

ரஜினியின்

விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பாக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும்.

அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும்.அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு கூறியுள்ளது.