அன்பு மகளே..! உருக்கமாக நினைவுகளை பகிர்ந்த இளையராஜா..!

Ilayaraaja Yuvan Shankar Raja
By Karthick Jan 26, 2024 02:15 PM GMT
Report

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று காலமானார்.

பவதாரிணி

இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான பவதாரணி, தொடர்ந்து எண்ணற்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

ilayaraaja-post-about-daughter-bhavatharani

குறிப்பாக விஜய்யின் "பிரண்ட்ஸ்" படத்தில் "தென்றல் வரும்",தாமிரபரணி படத்தில் "தாலியே தேவையில்லை", அனேகன் படத்தில் "ஆத்தாடி ஆத்தாடி", மாநாடு படத்தில் "மெஹருஃஜெயலா" போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

ilayaraaja-post-about-daughter-bhavatharani

கடந்த 2001-ஆம் ஆண்டு பாரதி படத்தில் "மயில் போல பொண்ணு ஒன்று" பாடலை பாடியதற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார். புற்றுநோய் பாதிக்கப்பட்டு, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை மரணமடைந்தார்.

ilayaraaja-post-about-daughter-bhavatharani

இவரின் மறைவு குறித்து தந்தை இசைஞானி தனது சமூகவலைதளபக்கத்தில், "அன்பு மகளே" தலைப்பிட்டு பவதாரணியின் சிறுவயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.