சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவில்லை; நடக்காததை பரப்புகிறார்கள் - இளையராஜா விளக்கம்

Ilayaraaja Virudhunagar
By Karthikraja Dec 16, 2024 01:16 PM GMT
Report

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள் என இளையராஜா விளக்கமளித்துள்ளார்.

இளையராஜா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள ஆடித் திருப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில், இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

ilayaraaja srivilliputhur andal temple

இதில் கலந்து கொள்ள வந்த இளையராஜா ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். அவர் உடன் சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஜீயர் வந்திருந்தார். 

கருவறைக்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு.. இதுதான் காரணம் - கோவில் நிர்வாகம் விளக்கம்!

கருவறைக்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு.. இதுதான் காரணம் - கோவில் நிர்வாகம் விளக்கம்!

அனுமதி மறுப்பு

அவரை வரவேற்பதற்காக ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயரும் அங்கிருந்தார். மேலும் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டது.

அதனையடுத்து கருவறைக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற போது இளையராஜா உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு கருவறைக்கு வெளியே நின்று இளையராஜா சாமி தரிசனம் செய்து விட்டு கிளம்பினார். 

ilayaraaja

இளையராஜாவை ஏன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்தது. கோவில் மரபுப்படி அர்த்த மண்டபத்திரற்குள் அர்ச்சகர்கள் மற்றும் மடாதிபதிகள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இளையராஜா விளக்கம்

இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். 

நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்." என தெரிவித்துள்ளார்.