கருவறைக்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு.. இதுதான் காரணம் - கோவில் நிர்வாகம் விளக்கம்!
கருவறைக்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இளையராஜா
ஸ்ரீவில்லிப்புத்தூர், ஆண்டாள் கோயில் புகழ்பெற்ற ஒரு கோயிலாகும். பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இங்கு வந்து வழிப்படுவது வழக்கம். கோயிலில் திவ்ய பாசுரம் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரியில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார்.
அங்குள்ள கோயிலில் ஆண்டாளை வழிப்பாடு நடத்தினார். அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறியுள்ளனர்.
நிர்வாகம் விளக்கம்
இதையடுத்து, கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜா கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில், இதுக்குறித்து விளக்கமளித்துள்ள கோவில் நிர்வாகம், ”ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.