பாடகி ஸ்ரேயா கோஷலிடம் மோசமாக நடந்துகொண்ட இளையராஜா - கொந்தளித்த பிரபலம்!
இசையமைப்பாளர் இளையராஜா மோசமாக நடந்துகொண்டது குறித்து பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
இளையராஜா
தமிழ் சினிமாவில் 80, 90-களில் இசை என்றாலே இளையராஜா தான் நினைவுக்கு வருவார். அவரது இசைக்கு ஈடு இணையே இல்லை என்றே சொல்லலாம். பண்ணபுரத்தை சேர்ந்த இளையராஜா, இன்று பார்க்கடல் வரையிலும் தனது இசைப்புகழை பரப்பியிருக்கிறார்.
இவர் இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் பல படங்களில் இசையமைத்துள்ளார் அதனால் இசை ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார்.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், இளையராஜா குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார். அதில் "மேடையில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல் ஒன்றை பாடிக்கொண்டு இருந்தார். காணாத ஒன்றை தேடுதே என்ற வார்த்தைக்கு பதிலாக காணாத ஒன்றை தோடுதே என தவறாக பாடலை பாடிவிட்டார் ஸ்ரேயா கோஷல்.
இதனால் அங்கு மேடையில் இருந்து இளையராஜா ஸ்ரேயா கோஷலை பார்த்து திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என பாடி ஸ்ரேயாவை அனைவரின் முன்னிலையில் விமர்சனம் செய்கிறார் இது பலரின் முன் வைத்து அவமான படுத்திவிட்டார்.
இவர் ஒரு பெங்காலி பெண் அவர் ஹிந்தி பாடல்களை பாடிக்கொண்டு இருக்கும் பாடகி ஆவார்.மேடையில் தவறுதலாக அவர் பாடியதை தமிழில் கிண்டல் செய்தார் இளையராஜா. தவறாக பாடினால் அவரிடம் சொல்லி அதை திருத்திக்கொள்ள வைக்கவேண்டும்.
அதை செய்யாமல் அவரை அநாகரிகமான முறையில் கிண்டல் செய்தார். இது மனிதமே இல்லை. அப்படி பேசிய நாளே அனைவரும் அவரை வெறுத்துவிட்டோம்" என்று காட்டமாக பேசியுள்ளார்.