எம்.பி பதவியேற்றதோடு சரி...ஒரு நாள் கூட மாநிலங்களவை செல்லாத இசையமைப்பாளர் இளையராஜா

Ilayaraaja Government Of India
By Thahir Jan 24, 2023 06:40 AM GMT
Report

மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவியேற்ற இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை நியமன எம்பிக்கள் 

கடந்த 2022 ஆம் ஆண்டு மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக இளையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் நியமிக்கப்பட்டனர்.

Ilayaraja who did not go to Rajya Sabha

இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாள் கூட பங்கேற்காத இளையராஜா 

நியமன எம்பிக்களில் தடகள வீராங்கனை பிடி உஷா மட்டும் 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார்.

Ilayaraja who did not go to Rajya Sabha

வீரேந்திர ஹெக்டே 5 நாட்கள், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒரு நாள் கூட கலந்து கொள்ளவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது.