கண்ணே கலைமானே .. பாடல் கண்ணீரை வரவைத்துவிட்டது : இளையராஜ உருக்கம்

Ilayaraaja Tamil nadu
By Irumporai Jun 21, 2022 10:56 AM GMT
Report

ட்விட்டரில் தனது ரசிகர்கர்கள் கேட்ட கேள்விகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய சினைமாவின் இசையமைப்பாளர்களில் தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தை அமைத்தவர் , இளையராஜா என்பதுதான் நிதர்சனமான உண்மை , கடந்த சில நாட்களாக, இளையராஜா சமீபகாலமாக தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களின் வாயிலாக அதிகம் உரையாடி வருகிறார்.

கண்ணே கலைமானே .. பாடல் கண்ணீரை வரவைத்துவிட்டது : இளையராஜ உருக்கம் | Ilaiyaraja Reacting To Fans Tweet

இந்த நிலையில் ட்வீட்டரில் ரசிகர்கள் அளித்த கேள்விகளுக்கு இளையராஜா பதில் கூறியுள்ளார் அந்த பதில்கள்

அதில், கண்ணே கலைமானே காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன் எனும் வரி வரும்போது தானாக என் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கிவிட்டது.

இளையராஜாவை ஏன் இசைக் கடவுள் என சொல்கிறார்கள் என்பதற்கு காரணம் உள்ளது என இளையராஜாவை டேக் செய்து பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலை நான் வெறும் 2 முதல் மூன்று நிமிடங்களில் கம்போஸ் செய்து விட்டேன். உண்மை என்னவென்றால் இந்தப் பாடல் நேராக உங்கள் இதயத்தை சென்றடையக் கூடியது.

அதனால் தான் மக்கள் இந்தப் பாடலைக் கேட்டு கரைந்து அழுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும்,ஆண் பாவம்தீம் இசை குறித்து தமிழ் சினிமாவின் சிறந்த தீம் இசைகளில் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ள ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள இளையராஜா, நான் இசை வழியாக என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் அது படம் செல்லும் போக்கில் பொருந்துகிறது, அவ்வளவு தான் என பதிலளித்துள்ளார்.

ராக் வித் ராஜாஇசை நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய பாடல் தனி பாடலாக ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இளையராஜா, ஒருவர் பாடல் கம்போஸ் செய்து அது உங்கள் மனதில் நிற்கிறதென்றால், அது உங்களின் மூளையின் திறன் அல்ல, அது உங்களை பாதிக்கிறதென்றால் அதுவே உயர்ந்த கலைப்படைப்பு, அந்த கலைப்படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

தனுஷை பாராட்டுக்கிறேன்

உங்கள் இதயத்தை தொட்டதற்காக நான் தனுஷைப் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் நெட்ஃப்ளிக்ஸின் பிரபல 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்தொடருக்கு இசை அமைப்பீர்கள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டு எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள இளையராஜா, ஒவ்வொரு பாடலும் இப்படி எதிர்பார்க்காத ஒன்று தான், அப்படி இல்லாவிட்டால் அதில் சுவாரஸ்யம் இல்லைஎனத் தெரிவித்துள்ளார்.

மழைன்னா ராஜாதான்

மழைனா சென்னை மக்கள் பக்கோடாவுடன் ராஜா சார் பாடல்களை கேட்கத் தொடங்கி விடுகிறார்கள் எனும் ட்வீட்டுக்கு ரியாக்ட் செய்துள்ள இளையராஜா, உங்கள் வாழ்க்கையில் ஏதாவது சம்பவம் நடைபெற்றால் என் பாடல் உங்களுக்கு நியாபகம் வரும், அல்லது என் பாடல்களில் ஏதாவதைக் கேட்டால் உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் நியாபகம் வரும். உலகம் முழுவதுமுள்ள ரசிகப் பெருமக்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

‘’ உன் மாமனார் இல்லையென்றால் இது நடந்திருக்காது ‘’ - தனுஷிடம் ரஜினி குறித்து என்ன பேசினார் இளையராஜா?