இளையராஜா கச்சேரி - 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடிய போது திரையில் செந்தில் பாலாஜி!
நீ பொட்டு வச்ச தங்க குடம் பாடல் பாடியபோது, பின்னணி திரையில் செந்தில் பாலாஜி படம் ஒளிபரப்பப்பட்டது.
இளையராஜா கச்சேரி
கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை வழக்கில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கரூரில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு முதன் முதலாக வருகை தந்தார். தொடர்ந்து பாடல்களுக்கு நடுவே மேடைக்கு சென்ற செந்தில் பாலாஜி இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
நீ பொட்டு வச்ச தங்க குடம்
இந்த நிகழ்ச்சியை நீண்ட நேரம் அமர்ந்து செந்தில் பாலாஜி ரசித்தார். அப்போது நீ பொட்டு வைத்த தங்க குடம் என பாடல் வந்த போது பின்னால் உள்ள திரையில் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த செந்தில் பாலாஜியின் முகம் காட்டப்பட்டதால் அங்கு ஆரவாரம் எழுந்தது.
இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் அவருக்கு தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
