பாடல்கள் மீது இளையராஜாவுக்கு எந்த உரிமையும் இல்லை - வழக்கில் அதிரடி திருப்பம்!

Echo Online Ilayaraaja Madras High Court
By Swetha Jun 14, 2024 05:24 AM GMT
Report

இளையராஜா பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என எக்கோ நிறுவனம் வாதத்தை முன்வைத்து உள்ளது.

 உரிமையும் இல்லை..  

இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை பயன்படுத்தி வருவதாக கூறி இளையராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பாடல்கள் மீது இளையராஜாவுக்கு எந்த உரிமையும் இல்லை - வழக்கில் அதிரடி திருப்பம்! | Ilaiyaraaja Song Copyrights Case

இதனை விசாரித்து பிறகு, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இசைஞானியின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தது.

விடாமல் துரத்தும் இளையராஜா; மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு அதிரடி நோட்டீஸ்!

விடாமல் துரத்தும் இளையராஜா; மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு அதிரடி நோட்டீஸ்!

அதிரடி திருப்பம்

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததையடுத்து, இசை நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இசையமைப்பாளர்கள் ஊதியம் பெற்று பணியாற்றுவதால் அவருக்கு ராயல்டி தவிர அனைத்து உரிமையையும் இழந்துவிட்டதாக வாதிட்டார். மேலும், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளருடன் எந்தவித ஒப்பந்தமும் செய்துகொள்ளாத இளையராஜா,

பாடல்கள் மீது இளையராஜாவுக்கு எந்த உரிமையும் இல்லை - வழக்கில் அதிரடி திருப்பம்! | Ilaiyaraaja Song Copyrights Case

பாடல்கள் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது என வாதிட்டார். இதை தொடர்ந்து, தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளர் எனவும் அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, இளையராஜா தரப்பு வாதத்துக்காக வருகிற ஜூன் 19-ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.