மோடி விவேகானந்தர் போன்றவர்; மக்களுக்காக இரவு பகல் உழைக்கிறார்- பாரிவேந்தர் புகழாரம்!

Perambalur trichy Lok Sabha Election 2024
By Swetha Apr 12, 2024 12:59 PM GMT
Report

மோடி ஒரு யோகி எனவும், நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென உழைத்து கொண்டிருப்பதாகவும், பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

வாளசிராமணி பகுதி

திருச்சி மாவட்டம் வாளசிராமணி பகுதியில் உள்ள பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளரான டாக்டர் பாரிவேந்தர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நான் செய்த பணிகள் எல்லாம் ஒரு (Progress Report ) போல உங்களுக்கு புத்தகமாக வழங்கியுள்ளேன்.

மோடி விவேகானந்தர் போன்றவர்; மக்களுக்காக இரவு பகல் உழைக்கிறார்- பாரிவேந்தர் புகழாரம்! | Ijk Paarivendar Election Manifesto In Trichy

இந்த புத்தகத்தை நீங்கள் படித்தீர்களானால்  தனக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் போடுவீர்கள்.எம்.பி தொகுதி நிதியான 17 கோடி ரூபாயில் 42 வகுப்பறைகள், சமூக கூடங்கள், ரேசன் கடை, உள்ளிட்டவை கட்டி கொடுத்து உள்ளேன்.

இந்த தேர்தலில் நல்லவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்,தமிழ்நாட்டு உள்ள அரசியல் வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் தான். நமது பிரதமர் மோடி ஒரு யோகி நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென அவர் உழைத்து கொண்டிருக்கிறார் என்று டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்.

பாரிவேந்தர் கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம் - பெரம்பலூர் தொகுதி மக்கள் நெகிழ்ச்சி!

பாரிவேந்தர் கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம் - பெரம்பலூர் தொகுதி மக்கள் நெகிழ்ச்சி!

வேலம்பட்டி பகுதி

இதை தொடர்ந்து வேலம்பட்டி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு, கிராம மக்கள் திரளாகக்கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் , நான் எம்.பி ஆனால் ஆயிரத்து 500 ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இலவச மருத்துவம் வழங்கப்படும்.

மோடி விவேகானந்தர் போன்றவர்; மக்களுக்காக இரவு பகல் உழைக்கிறார்- பாரிவேந்தர் புகழாரம்! | Ijk Paarivendar Election Manifesto In Trichy

மோடி நம் நாட்டு மக்கள் வறுமையில் இருக்க கூடாது என்பதற்காகவே கடுமையாக உழைத்து கொண்டிருகிறார். நான் வெற்றி பெற்று வரும்போது நிச்சயமாக உங்கள் ஊர் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று டாக்டர் பாரிவேந்தர் மக்களுக்கு உறுதி அளித்தார்.

ஊரக்கரை பகுதி

தொடர்ந்து ஊரக்கரை பகுதியில் ஆதரவு திரட்டிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மக்களிடம் வாக்குறுதிகளைத் அளித்து வாக்கு சேகரித்தார். பிறகு தா.பேட்டை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

மோடி விவேகானந்தர் போன்றவர்; மக்களுக்காக இரவு பகல் உழைக்கிறார்- பாரிவேந்தர் புகழாரம்! | Ijk Paarivendar Election Manifesto In Trichy

அங்கு பேசிய அவர், அரியலூர் வழியாக நாமக்கல்லுக்கு நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டம் நிறைவேறினால் நிச்சயம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். இது ஒரு 60 ஆண்டு கால கனவு திட்டம் எனவே இது நிறைவேற்றப்படும்.

தேர்தலில் ஊழல் செய்யாதவர்களாக, லஞ்சம் வாங்காத நல்லவர்களை, தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திமுகவினர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி மக்களை ஏமாற்றி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் மோடி விவேகானந்தர் போன்றவர் நாட்டு மக்கள் கஷ்டப்படகூடாது என இரவு பகலாக உழைத்து கொண்டு இருக்கிறார் என்று டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் கிராமம்

இறுதியாக மேட்டுப்பாளையம் கிராமத்தில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தருக்கு வானவேடிக்கை முழங்க தேசிய ஜனநாயக கூட்டணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், 2019 வாக்குறுதியின்படி 118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியுள்ளனர்.

மோடி விவேகானந்தர் போன்றவர்; மக்களுக்காக இரவு பகல் உழைக்கிறார்- பாரிவேந்தர் புகழாரம்! | Ijk Paarivendar Election Manifesto In Trichy

நான் மீண்டும் எம்பி ஆனால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுகிறது.தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிகள் மோடியின் கரத்தை வலுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தினார்.