எவ்வளவு நீராக இருந்தாலும் உள்வாங்கும் அதிசய கிணறு; எப்படி? ஆய்வில் விலகிய மர்மம்!
ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணறு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிசய கிணறு
நெல்லை, முதுமொத்தன்மொழி ஊராட்சியில் உள்ளது ஆயன்குளம் அதிசய கிணறு. வெள்ளப்பெருக்கின் போது பல ஆயிரம் கனஅடி உபரி நீர் இந்த கிணற்றுக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கிணறு நிரம்பி வழிந்ததே இல்லை.
இந்நிலையில், குமரி கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த கிணற்றுக்குள் பல ஆயிரம் கன அடி நீர் திருப்பி விடப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அனுப்பிய நீரையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது.
விலகிய மர்மம்
இது எப்படி என மர்மம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. தொடர்ந்து, ஐஐடி பேராசிரியர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். கிணறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீரில் இயங்கும் கேமராக்களை செலுத்தினர். இந்த கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக இருக்கிறது.
திருநெல்வேலியில் இருக்கும் நண்பர் அனுப்பிய வீடியோ. குறிப்பாக அந்த கிணறு வீடியோ அதிசயமாக இருக்கு. எவ்ளோ வெள்ளம் போனாலும் இப்ப வரை நிரம்பாமல் இருக்கு. அந்த வீதியில் இருக்கும் தண்ணீரை அந்த கிணற்றில் தான் விடுகிறார்களாம் #StaySafe #தூத்துக்குடி #திருநெல்வேலி #தென்காசி #rainalert pic.twitter.com/bXlpBbDMQr
— Gumbala Suthuvom, Sweden (@GumbalaS) December 17, 2023
மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன் சுண்ணாம்பு பாறைகளில் ரியாக்ஷன் ஆகி அதில் துவாரங்களை உருவாக்குகிறது. அவை நாளடைவில் மிகப் பெரிய குகைகளாக மாறியது தெரியவந்தது. சில கிணறுகளில் கால்வாய் போன்று உருவாகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பாறைகளை மழைநீர் துளைத்து குகைகளாக மாற்றுகிறது.
இதனால் கிணற்றில் பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் ஓடைகள் உருவாகியிருக்கின்றன. 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலத்தடி நீர் பாதைகள் உருவாகியுள்ளன. பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது.
இதனால் சுற்றுபுறத்தில் இருக்கும் கிணற்றின் நீர் மட்டம் உயர்ந்து கொண்ட போவது தெரியவந்துள்ளது.