இறைச்சி சாப்பிடாதீங்க; அதனால்தான் இதெல்லாம் நடக்குது - ஒரே போடு போட்ட ஐஐடி இயக்குநர்!
ஐஐடி இயக்குனர் தெரிவித்து கருத்து சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி இயக்குனர்
இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் வரை பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதல்வர் சுக்விந்தர் சிங் வேதனை தெரிவித்தார். இதுகுறித்த காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேரழிவுகள்
இந்நிலையில், மண்டியில் உள்ள ஐஐடியின் இயக்குநராக லக்ஷ்மிந்தர் பெகேரா மாணவர்கள் மத்தியில் பேசிய போது, “சுற்றுச் சூழலுடன் விலங்குகள் ஒரு கூட்டு வாழ்வை கொண்டுள்ளது. அப்பாவி விலங்குகளை உணவுக்காக வெட்டிக் கொல்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள், பெரு வெள்ளம் என அடிக்கடி பேரழிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.
மக்கள் இறைச்சி சாப்பிடுவதுதான் இதற்கு காரணம். விலங்குகளை நாம் கொடுமைப் படுத்துவதாலும் ஏற்படும் விளைவுகளே இவை. இறைச்சி சாப்பிடுபவர்கள் நல்ல மனிதர்களே இல்லை. நல்ல மனிதர்களாக மாற நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், இறைச்சி சாப்பிட மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.