கோமியம் குடிச்சா காய்ச்சல் போகும்; சென்னை ஐஐடி காமமோடியா! சொன்னது யார் தெரியுமா?

Indian National Congress Chennai K. Selvaperunthagai
By Sumathi Jan 20, 2025 06:15 PM GMT
Report

செல்வ பெருந்தகையின் அறிக்கையில் காமகோடிக்கு பதிலாக காமமோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோமிய சர்ச்சை

சென்னை ஐஐடியின் இயக்குனரான காமகோடி, சந்நியாசி ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அவர் கோமியத்தை குடித்தார். அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் விட்டுவிட்டது எனக் கூறியிருந்தார்.

iit kamakodi - selva perunthagai

இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்ததில் கோமியம் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ளது.

இதை மனிதர்கள் அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளதை காமகோடி போன்றவர்கள் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்பை தருகிறது. வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறுவதை வழிமொழிந்து காமகோடி பேசியிருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

நாடகம் ஆடுவதில்தான் கில்லாடி ஆச்சே.. இங்க வேணானு சொல்றேன் - அரசை விளாசிய விஜய்

நாடகம் ஆடுவதில்தான் கில்லாடி ஆச்சே.. இங்க வேணானு சொல்றேன் - அரசை விளாசிய விஜய்

செல்வ பெருந்தகை கண்டனம்

அறிவியல்பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்ததில்லை என உறுதியாக நம்பப்படுகிற நிலையில் அதற்கு விரோதமாக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரே பேசியிருப்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒருவர் ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர்.

கோமியம் குடிச்சா காய்ச்சல் போகும்; சென்னை ஐஐடி காமமோடியா! சொன்னது யார் தெரியுமா? | Iit Director About Cow Urine Sparks Controversy

இவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதால் இவரைப் போன்றவர்கள் இப்பொறுப்பில் நீடிப்பது அங்கே படிக்கிற மாணவர்களின் எதிர்காலத்திற்கே உகந்ததல்ல. எனவே, இத்தகைய கருத்துகளின் மூலம் கல்வி நிலையங்களை காவி மயமாக்குவதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முதல் பத்தியில் 'காம மோடி' எனவும் அடுத்தடுத்த இடங்களில் காமகோடி என்றும் இருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.