எங்க நாட்டுக்கு வாங்க ரூ.71 லட்சம் தற்றோம்..! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு..!
தங்கள் நாட்டில் குடியேறும் மக்களுக்கு ரூ.71 லட்சம் தருவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அயர்லாந்து அரசு.
அயர்லாந்து வெளியிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்பு
வேலைக்காக சில பேர் வேறு நாடுகளுக்கு செல்வதுண்டு, ஒரு சிலர் சுற்றுலாவுக்காக வேறு நாடுகளுக்கு செல்வதும் உண்டு.
இன்னும் சிலர் அந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பிடித்து போய் அந்த நாட்டிலே குடியேறி விடுகின்றனர். இதுபோல் வேறு நாடுகளில் குடியேறும் இந்தியர்களுக்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது.
இப்படிபட்ட நிலையில் ஐரோப்பியாவில் உள்ள அயர்லாந்து நாட்டு அரசு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேறு நாட்டில் இருந்து தன் நாட்டில் வந்து குடியேறுபவர்களுக்கு 80 ஆயிரம் யூரோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.71 லட்சம் தருவதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பியாவில் உள்ள அயர்லாந்து நாட்டில் குடியேற விரும்பும் மக்களுக்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
குறிப்பாக அந்நாட்டின் கடல்சார் சமூகத்திற்கு குடியேற விரும்பும் மக்களுக்கு இந்த பணத்தை ஊக்கத்தொகையாக கொடுக்க இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எப்போது இருந்து விண்ணப்பிக்கலாம்?
மேலும் அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் 'Our Living Islands' திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக அயர்லாந்து தீவுகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், கடல் கடந்த தீவுகளில் எதிர்காலத்திற்கான நிலையான சமூகத்தை கட்டமைக்கவும், மக்கள் செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அயர்லாந்து நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து நாட்டில் குடியேற விரும்புவோர் ஜுலை 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.