ஜெட் வேகத்தில் செல்லும் தங்கத்தின் விலை..1959-இல் ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!
1959-இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தது என்பது குறித்த சுவாரஸ்ய தகவலைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கிராம்
உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டு வரும் போர் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியப் பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதென்பது இந்தியர்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தங்கத்தில் முதலீடு செய்வதென்பது பாதுகாப்பான ஒன்றாக இருந்து வருகிறது. இது செல்வம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாகவே தங்கத்தை நகைகளாக வாங்குவது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை
அந்த வகையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,871 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கம் 7,215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 1959 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட தங்கத்தின் நகைக்கடை பில் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பில்லில் 1 தோடா தங்கத்தின் விலை ரூ. 113 என்றும், ஒரு தோடா என்பது 11. 66 கிராம் ஆகும். 1959இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை தோராயமாக 10 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை இருந்துள்ளது.