அது மட்டும் நடந்தால்..ஈரானை அடித்து நொறுக்குவேன்..ஓப்பனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

Donald Trump United States of America Iran World
By Swetha Sep 26, 2024 03:30 PM GMT
Report

  ஈரானை அடித்து நொறுக்குவேன் என குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஈரானால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

அது மட்டும் நடந்தால்..ஈரானை அடித்து நொறுக்குவேன்..ஓப்பனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! | If Usa Peace Disturbed Iran Is Destroyed Say Trump

இந்த நிலையில், வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் கூறியதாவது, என்னை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதில் ஈரான் நாட்டுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நாடு மூலம் என் உயிருக்கு ஆபத்து - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த நாடு மூலம் என் உயிருக்கு ஆபத்து - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

ஈரானை.. 

நான் அதிபராக இருந்தால், உங்களை எச்சரிக்கும் வகையில் எனது நடவடிக்கை இருந்து இருக்கும். முன்னாள் அதிபர்களையோ அல்லது அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையோ கொலை செய்ய முயற்சித்தால்,

அது மட்டும் நடந்தால்..ஈரானை அடித்து நொறுக்குவேன்..ஓப்பனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! | If Usa Peace Disturbed Iran Is Destroyed Say Trump

ஈரானை அடித்து நொறுக்குவேன் என எச்சரிக்கிறேன்.ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் அமெரிக்க வருகை விசித்திரமானது. அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என தகவல் வந்ததும், அமெரிக்காவில் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மற்றும் அடுத்த அதிபராக போகிறவரை மிரட்டும் அவருக்கு அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர். என்று தெரிவித்துள்ளார்.