மோசமான சாலையா? டோல்கேட் கட்டணம் கிடையாது - நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு

Shri Nitin Jairam Gadkar India
By Karthikraja Jun 27, 2024 09:00 AM GMT
Report

மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளுக்கு சுங்க கட்டணம் வசூலளிக்க கூடாது என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி

செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களைக் கண்காணித்து சுங்கச் சாவடி கட்டணத்தை வசூலிக்கும் திட்டம் தொடா்பான சா்வதேச பயிலரங்கு டெல்லியில் நேற்று(26.06.2024) நடைபெற்றது. இதில் சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன. 

nitin katkari

இதில் பங்கேற்று பேசிய மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடப்பு நிதியாண்டில் 5,000 கி.மீ. தொலைவுள்ள சாலைகளில் செயற்கைக்கோள் உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும். 

டோல்கேட்டில் இவர்களுக்கெல்லாம் கட்டணம் கிடையாது - உடனே அப்ளை பண்ணுங்க!

டோல்கேட்டில் இவர்களுக்கெல்லாம் கட்டணம் கிடையாது - உடனே அப்ளை பண்ணுங்க!

சுங்க கட்டணம்

சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும்தான் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமாக இருக்கும் இடங்களில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. எந்த இடத்திலும் சேவை சிறப்பாக இருந்தால் மட்டும் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். சேவை முறையாக இல்லாவிட்டால் கட்டணம் தேவையில்லை. 

tollplaza no fee

குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக் கொண்டு அங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க முற்பட்டால், மக்களின் கோபத்தை எதிா்கொள்ள நேரிடும் என்றாா்.

மேலும், 2023-24-ஆம் ஆண்டில் சுங்கச்சாவடி கட்டணமாக ரூ.64,809.86 கோடி வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம். தற்போதைய சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு செயற்கைக்கோள் உதவிவுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டால் மேலும் 10 ஆயிரம் கோடி வரையில் சுங்கச் சாவடி கட்டண வசூல் அதிகரிக்கும்’ என பேசியுள்ளார்.