இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் ராஜயோகம் தான் - எந்த நேரம் தெரியுமா?
தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல் பண்டிகை. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கான, விவசாயிகளுக்கான, விவசாயத்திற்கு உதவும் கதிரவன்,பூமி, விலங்குகள் இவற்றுக்கான பண்டிகையாகும்.
பொங்கலோ...பொங்கல்..
ஆடி மாதத்தில் தான் விவசாயிகள் அதிகபடியான பயிர்களை நடுவார்கள். அப்படி நடப்படும் பயிர்கள் தை மாதத்தில் தான் அறுவடை செய்வார்கள்.
அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால்,நெய் சேர்த்து மஞ்சள் கொத்து கட்டிய புதுப் பானையிலிட்டு, புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் பண்டிகை தான் தைப்பொங்கல் திருவிழா.
பொங்கல் பானையில் பொங்கி வரும் போது அனைவரும் சேர்ந்து “பொங்கலோ பொங்கல்” என உற்சாகமாக குரல் எழுப்புவது அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், அன்பும், ஆரோக்கியமும், செல்வம், செழிப்பு என அனைத்தும் பொங்கும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி அதற்கு ஏற்ப மாதப்பிறப்பு நம்பிக்கையும், நல்ல எண்ணங்களையும், நேர்மறை சிந்தனைகளையும், உழைப்புக்கான உந்துதலையும் தன்னுடன் கொண்டு வருகின்றது.
இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் ராஜயோகம்
இந்த ஆண்டு, உத்தராயன புண்ய காலம், அதாவது தை மாதம் 14 ஆம் தேதி, இன்று இரவே பிறந்துவிடுகிறது. ஆகையால் ஞாயிறு காலை நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
பொங்கல் வைக்க மிகவும் நல்ல நேரம் காலை 7.40 மணி முதல் 9.40 மணியாகும். இந்த நேரத்தில் அமோகமான ராஜயோகம் அமைவதோடு, சுக்கிர மற்றும் புதன் ஓரையும் உள்ளன.
இந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால், சூரியன் அதிகப்படியான மகிழ்ச்சியை அடைந்து உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, கல்வி, நிம்மதி என அனைத்தையும் தந்தருள்வார்.