சிறுவர்களின் கவனத்திற்கு: ரூ. 25,000 அபராதம்.. 3 மாத சிறை - போக்குவரத்து துறை அதிரடி!

Tamil nadu
By Jiyath May 30, 2024 12:37 PM GMT
Report

18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

புதிய விதிமுறை

தமிழகத்தில் சமீப காலமாக 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். 

சிறுவர்களின் கவனத்திற்கு: ரூ. 25,000 அபராதம்.. 3 மாத சிறை - போக்குவரத்து துறை அதிரடி! | If Minors Are Driving Rc Book Cancellation

இந்நிலையில் போக்குவரத்து துறை ஒரு விதியை அமல்படுத்துகிறது. அதன்படி, 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், அவர்கள் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும்.

ஒருவர் மட்டுமே வாழ்ந்த வினோத கிராமம்; காற்றில் கரைந்த கடைசி உயிர் - நிறைவேறாத ஆசை!

ஒருவர் மட்டுமே வாழ்ந்த வினோத கிராமம்; காற்றில் கரைந்த கடைசி உயிர் - நிறைவேறாத ஆசை!

3 மாத சிறை

அதேபோல் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், மேலும் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால்,

சிறுவர்களின் கவனத்திற்கு: ரூ. 25,000 அபராதம்.. 3 மாத சிறை - போக்குவரத்து துறை அதிரடி! | If Minors Are Driving Rc Book Cancellation

அவர்களது பெற்றோருக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாத சிறையும் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த விதி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.