சமந்தாவை இப்போ பார்த்தால்.. கட்டிப்பிடித்துவிடுவேன் - ஓப்பனாக சொன்ன நாக சைதன்யா!
நாக சைதன்யா சமந்தா குறித்து பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தாவை..
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் இருவரும், கடந்த 2021ஆம் ஆண்டு திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
தொடர்ந்து, நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹைதரபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார்.
நாக சைதன்யா
இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், நாக சைதன்யா முன்பு கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, சில காலத்துக்கு முன்பு தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'இப்போது அவரை பார்த்தேன் என்றால் ஒரு ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன்' என்றார்.
முன்னதாக சோபிதாவுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சமந்தாவின் கடைசி புகைப்படத்தையும் சைதன்யா நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.