தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால்..! முதல் கையெழுத்து இது தான் - அண்ணாமலை வாக்குறுதி..!
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் நாள் முதல் கையெழுத்து காவல் துறையினரின் சம்பளம் இரட்டிப்பு செய்யப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
அண்ணாமலை உறுதி
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தன் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார்.
ஆரணி பகுதியில் மக்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாடு அரசின் காவல் துறை எதிர்கொள்ளும் இன்னல்களை குறித்து பேசினார்.
பல சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், வரும் 2026-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இது தான் முதல் நாள் முதல் கையெழுத்து என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
முதல் கையெழுத்து
அதாவது அயராது வேலை செய்து வரும் காவல் துறையினருக்கு சம்பளம் இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் இது தான் முதல் நாள் முதல் கையெழுத்து என உறுதிபட தெரிவித்தார்.
மேலும், 8 மணி நேரம் மட்டும் தான் ஒரு காவலருக்கு நிச்சயமாக வேலை என ஆணித்தரமாக கூறிய அவர், வேண்டுமென்றால் அதற்காக இன்னும் அதிகமான காவலர்களை பணிக்கு எடுக்கலாம் என்றும் அதற்காக வரியும் காட்டலாமே என்று கூறினார்.