MBA'ல 99.4% எடுத்துருகேன் - துரைமுருகன் படித்திருக்கமாட்டார் - என்கிட்ட வேண்டாம்..! அண்ணாமலை பதிலடி
திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு தெரிந்ததை விட தனக்கு அதிகமாக தெரியும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் பதில்
வேலூர் கே.வி புறத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, விரைவில் அமலாக்கத்துறையினர் எம்.பி.கதிர் ஆனந்தின் வீட்டின் கதவை தட்டும் என்றும் கூறி, மாநிலம் எங்கு செல்கிறது என்பது தனக்கு நன்றாக தெரியும் என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன், அண்ணாமலை என economist'ஆ..? என்று கேள்வி எழுப்பி, பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் தங்களை பாராட்டியிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு பொருளாதாரம் தெரியும் என்று கூறி, MBA finance IIM லக்னோவில் படிச்சிருக்கேன் என்றும் 10 லட்சம் பேர் எழுதிய CAT தேர்வில் 99.4% percentile எடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
மேலும், துரைமுருகனை விட தனக்கு அதிகமாகவே தெரியும் என்று கூறிய அண்ணாமலை, அவர் படித்திருக்காமல் இருக்கலாம், இந்த கதையெல்லாம் தன்னிடம் வேண்டாம் என்றும் மாநிலம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தனக்கு நன்றாகவே தெரியும் என மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார்.