ஜிம் செல்வோர் கவனத்திற்கு; நீங்க புரோட்டீன் பவுடர் சாப்பிடுபவரா? ஒரு முக்கிய எச்சரிக்கை!
புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துபவர்களுக்கு ஐசிஎம்ஆர் எச்சரிகை விடுத்துள்ளது.
புரோட்டீன் பவுடர்
இளைஞர்கள் தங்களது உடலை வலுவாக்குவதற்காக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் பெரும்பாலானவர்கள் இயற்கையான உணவுகளின் வழியே உடல் எடையை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அனால் ஒரு சிலர் அண்மைகாலமாக புரோட்டீன் பவுடர்கள் என்ற செயற்கை உணவு வகைகளை எடுத்துக்கொண்டு எடையை கூட்டுவது அதிகரித்துள்ளது. பொதுவாகவே புரத சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம் குறிப்பாக உடம்பை வலிவாக்க நினைப்பவர்கள் இதற்கு அதிக முக்கிய துவம் கொடுக்கிறார்கள்.
ஏனெனில் புரோட்டீன் பவுடர்கள், பொதுவாக முட்டைகள், பால், பால் பொருட்களில் இருந்து கிடைக்கும் சோயா பீன்ஸ்கள், பட்டாணி, அரிசி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. சமீபத்தில் இந்த புரோட்டீன் பவுடர்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் ஆய்வு மேற்கொண்டது.
முக்கிய எச்சரிக்கை
அதில் பல புரோட்டீன் பவுடர் நிறுவனங்கள், இந்த பவுடர்களில் சர்க்கரை, கலோரிகள் இல்லாத இனிப்புகள், செயற்கை நிறமிகள் ஆகியவற்றை கலப்பதாக தெரிய வந்துள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வதால் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் புரோட்டீன் தவிர கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உடலில் இயற்கையான உணவு செரிமானத்திற்கு மிகவும் அவசியம். ஆனால், அதிக அளவிலான புரோட்டீன்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது எனவே அதை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது மட்டுமே உடலுக்கு முழுமையான வலிமையை தரும் எனவும் புரோட்டீன் பவுடர்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் தசைகள் அதிகரிக்கும் என்ற தவறான கருத்து உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வோருக்கும், விளையாட்டு வீரர்கள் இடையேயும் இருப்பதாக ஐசிஎம்ஆர் கவலை தெரிவித்துள்ளது.