மினிமம் பேலன்ஸ் குறைப்பு - புதிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிஐசிஐ
ஐசிஐசிஐ வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது.
இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், வங்கிகளே குறைந்தபட்ச இருப்புத் தொகை முடிவு செய்துக் கொள்ளலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அளித்தது.
புதிய அறிவிப்பு
இந்நிலையில், நகர்புறங்களில் 50 ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டு இருந்த மாதாந்திர இருப்புத் தொகையை ஐசிஐசிஐ வங்கி 15 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளது.
அதேபோல், புறநகர் பகுதிகளில் 25,000 ரூபாயாக அறிவிக்கப்பட்ட மாதாந்திர இருப்புத் தொகை 7500 ரூபாயாகவும்,
கிராம புறங்களில் 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்ட மாதாந்திர இருப்புத் தொகையை 2500 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.