வீடியோகான் கடன்: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் CEO கைது!
நிதி முறைகேடு வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி முறைகேடு
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓவாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் தான் பதவி வகித்த 2012ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் ரூ.3,250 கோடி கடன் வழங்கியுள்ளார்.

இந்த கடன் பரிவர்த்தனை மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சர் மற்றும் உறவினர்கள் பெருமளவில் நிதி ஆதாயம் பெற்றது தெரியவந்தது. அதனால், சிஐசிஐ வங்கி தலைமை பொறுப்பில் இருந்து சந்தா கோச்சார் நீக்கப்பட்டார். தொடர்ந்து சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
சந்தா கோச்சார் கைது
தொடர்ந்து, அவர்களது அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்து ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், டெல்லியில் விசாரணைக்கு ஆஜரான இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களது சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீபக் கோச்சார் ஜாமீனில் உள்ளார்.