ஐஸ்கிரீமால் ஏற்படும் மாரடைப்பு - எச்சரிக்கும் மருத்துவ ரிப்போர்ட்
ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்ப்போம்.
ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீமில் திக கொழுப்புள்ள கிரீம் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதிக கொழுப்புள்ள பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
கார்போஹைட்ரேட்டுகளின் அளவு மிக அதிகமாக உள்ள நிலையில், அதிக அளவிலான சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்டுகளை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது.
மாரடைப்பு அபாயம்
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஐஸ்கிரீம்களை சாப்பிட்டால், தோராயமாக 1000 கலோரிகள் என்ற அளவில் உடலில் சேரும். எப்போதாவது ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுடன்' ஒப்பிடுகையில் தினமும் சாப்பிடுபவர்களுக்கு ஆபத்து அதிகம் என்பதை ஆய்வுகள் பல குறிப்பிட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், ரொட்டி, பாஸ்தா, மிட்டாய்கள், கேக் போன்ற கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணும்போதும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.